• Sat. May 11th, 2024

கோவையில் ஜெம் அறக்கட்டளை மற்றும் ஜெம் மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி

BySeenu

Feb 18, 2024

குழந்தைகள் , பெண்கள் , மாற்றுதினாளிகள் உட்பட 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
கோவையில் ஜெம் அறக்கட்டளை மற்றும் ஜெம் மருத்துவமனை சார்பில் இரவுநேர பெண்கள் மாரத்தானின் இரண்டாம் பதிப்பு வஉசி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குழந்தைகள், பெண்கள் , மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீராங்கனைகள் என 5000க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மற்ற மாரத்தான்களைப் போலல்லாமல், இந்த நிகழ்வு மாலை நேரங்களில் நடத்தப்படுகிறது, இதனால் இது சிறப்புமிக்கதாக உள்ளது. ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.சி.பழனிவேலு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ், எமரால்டு குழுமத்தின் தலைவர் சீனிவாசன், மார்ட்டின் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சாண்டியாகோ மார்ட்டின் , சென்னை சில்க்ஸ் விநாயகம் மற்றும் திருமதி துரைசாமி, சக்தி மசாலா ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

வ உ சி மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஆர்டிஓ அலுவலக சாலை வழியாக சென்று அண்ணாசிலை வரை சென்று திரும்பினர். முழு பாதையும் வண்ணமயமான விளக்குகளாலும் இசையாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது, ஓடும் பாதையை துடிப்பானதாகவும், தெளிவாகவும் மாற்றியது. இந்த மாரத்தான் போட்டியில் 10 கி.மீ, 5 கி.மீ, 3 கி.மீ என மூன்று பிரிவுகளாக ஓடினர். இந்த இரவு நேர மாரத்தான் போட்டியின் முக்கிய அம்சங்கள்:

1) பெண்களின் உடற்தகுதி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

2) கோவை இரவு நேரங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்பதை முன்னிலைப்படுத்துதல்

3) ஜெம் அறக்கட்டளையின் பல்வேறு சமூக நலச் செயல்பாடுகளுக்கு நிதி திரட்டுதல் போன்ற பல நோக்கங்களுடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த நோயாளிகளுக்கு இலவச புற்றுநோய் சிகிச்சை, பொதுமக்களிடையே புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது.ஜெம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ் கூறுகையில்,
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்தியா அளவில் கோவையில் மட்டும்தான் பெண்களுக்காக நடத்தக்கூடிய மாரத்தான் போட்டி எனவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் மாரத்தான் போட்டியில் பெண்கள் பங்கேற்று உள்ளதாகவும், இந்த மாரத்தான் போட்டியில் வரும் வருவாய்களை முழுமையாக புற்று நோய்க்காக செலவு செய்யப்படும் எனவும் கடந்த ஆண்டு 100 நபர்களுக்கு இலவசமாக புற்றுநோய் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பெண்கள் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கினர், கோயம்புத்தூர் நகர காவல்துறை சார்பில் போக்குவரத்து மற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற முக்கிய பங்காற்றிஉள்ளனர்.
கோயம்புத்தூர் நகர காவல்துறை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசைகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *