• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி என்ற பெயரில் புதிதாக வர்த்தகம்…

BySeenu

Nov 30, 2025

இந்தியாவில் மிகப்பெரிய வீட்டுமனை திட்ட மேம்பாட்டு முன்னணி நிறுவனமாக வகிக்கும் ஜி ஸ்கொயர் கோவை சவுரிப்பாளையம் ஜி.வி ரெசிடென்சி அருகே ராஜீவ் காந்தி நகர் அடுத்துள்ள ஜி ஸ்கொயரின் புதிய முதன்மை திட்டமான ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி இந்த திட்டத்தை ஜி ஸ்கொயர் நிறுவனரும் மற்றும் நிர்வாக இயக்குநருமான பாலா ராமஜயம் தொடங்கி வைத்தார்.

மேலும் கோவை மையப் பகுதியில் 750 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய உயர்தர பிரத்யேக மனைத்திட்டத்தை ஜி ஸ்கொயர் அறிமுகப்படுத்தி உள்ளது.ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி திட்டத்தின் அறிமுக சலுகையாக ஒரு சென்ட் 40 லட்சம் ரூபாயாக நிர்ணயித்துள்ளனர். தற்போது சந்தை நிலவரப்படி இந்த திட்டத்தின் மதிப்பு குறுகிய காலத்தில் இருமடங்காக உயரும் என ஜி ஸ்கொயரின் நிர்வாக இயக்குனர் பாலா ராமஜயம் தெரிவித்தார்.இது குறித்து ஜி ஸ்கொயரின் நிர்வாக இயக்குனர் பாலா ராமஜயம் கூறுகையில்:

கோவை மாநகரில் மிக முக்கியமான வர்த்தகம் மற்றும் குடியிருப்பு திட்டங்களில் ஒரு அங்கமாக மாற்றுவதற்காக சிறந்த வாய்ப்பு ஆகும். மேலும் கோவையில் பிரதான பகுதியில் அமைந்திருப்பதால் பிரீமியம் தரத்திற்கான விலை மதிப்பு மற்றும் வர்த்தக மனைப்பிரிவு சந்தையில் திட்டம் புதிய தரங்களை உருவாக்கும் என நம்பிக்கையை தெரிவித்தார்.

அடுக்குமாடி குடியிருப்புகள்,வில்லாகள் மற்றும் வணிக தேவைக்கான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் பாதுகாப்பு அம்சங்களுடன் வளாக குடியிருப்பு வாழ்க்கையை முறையில் சிறந்து விளங்கும் என கூறினார்.