• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரெஸ்பான்சிவ் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு – இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு…

BySeenu

Dec 17, 2023

திறம் வாய்ந்த மேலாண்மை சேவைகளை வழங்கும் தொழில்நுட்ப (SRM) மென்பொருளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ரெஸ்பான்சிவின் தனது புதிய அலுவலகத்தை கோவை வடவள்ளி பகுதியில் தொடங்கியுள்ளது .

ரெஸ்பான்சிவ் விரைவான வளர்ச்சியின் காரணமாக இந்தியாவில் அமைந்துள்ள புதிய இடம் தற்போது உள்ளதைவிட இரண்டு மடங்கு ஊழியர்களை பணியாற்ற ஏதுவாக உள்ளது .ஸ்ட்ராட்டஜிக் ரெஸ்பான்ஸ் மெனேஜிமென்ட் வலுவான வளர்ச்சியை பெற்றுள்ளது.

அதிகரித்து வரும் வணிகம் சார்ந்த கேள்விகள் மற்றும் தகவல் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க நிறுவனங்கள் பலரும் தற்போது இந்த SRM சேவையை வேகமாக தங்கள் நிறுவனங்களின் பின்பற்ற துவங்கி வருகின்றனர்.ரெஸ்பான்சிவ் நிறுவனம் உருவாக்கியுள்ள SRM சேவைகள் வழங்கும் தளம் தானியங்கி வழிமுறையில் மிகசிறப்பாக செயல்பட முடியும் என்பதால் இது தொழில் நிறுவனங்களின் மதிப்பை கூட்டிடும் வகையில் அமைந்துள்ளது.

கோவையை பூர்விகமாக கொண்ட ரெஸ்பான்சிவ் தலைமை நிர்வாக அதிகாரி கணேஷ் சங்கர் கூறுகையில்,
“கோயம்புத்தூரில் எங்களின் வளர்ச்சியானது, ரெஸ்பான்சிவ் பரிணாம வளர்ச்சியின் பிரதிபலிப்பாகவும், உலகளாவிய நிறுவனங்கள் எவ்வாறு தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் பரிமாறிக் கொள்கின்றன என்பதை மாற்றியமைப்பதற்கான எங்களின் லட்சியத்தை நோக்கிய முன்னேற்றம்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில் “எங்கள் உள்ளூர் குழு உறுப்பினர்கள் விரைவாக மற்றும் புதுமைகளைத் தொடர்வதால் அவர்களுக்கான இடத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் கூடுதல் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு ஆதரவாக அதிக இடத்தைப்பெறுகிறோம் என தெரிவித்தார்.