• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருநங்கைகளுக்கு நாயக், கல்நாயக் விருதுகள்..,

ByVasanth Siddharthan

Apr 15, 2025

திண்டுக்கலில் தேசிய திருநங்கையர் தினத்தை ஒட்டி மெர்சி பவுண்டேஷன், தாய் கூடு பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து நாயக் மற்றும் கல்நாயக் விருதுகள் வழங்கும் விழா அனுக்கிரகா கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திண்டுக்கல் தேனி மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர்.

காவல்துறையில்,கல்வித்துறை விவசாயம் தொழில் துறை ஆகிய பல்வேறு துறைகளில் சாதித்த திருநங்கைகளுக்கு பொன் துகில் அணிவித்து, தலையில் கிரீடம் சூட்டி,நாயக் மற்றும் கல்நாயக் விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது. விழாவில் மெர்சி பவுண்டேஷன் நிறுவனர் மெர்சி செந்தில்குமார்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தாய் கூடு பவுண்டேஷன் நிறுவனர் குணவதி அனுக்கிரக கல்லூரி பங்குத்தந்தை பெர்னாட்ஷா, சகாயராஜ். சத்யன் காஸ்மாஸ் லயன் சங்க புரவலர் திப்புசியஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருநங்கை குணவதி கூறுகையில் பல்வேறு பட்டப் பெயர்கள் வைத்து சமுதாயத்தில் அழைக்கப்பட்ட நிலையில் மணிமுத்து பெயர் வைத்து எங்களை கௌரவப்படுத்தியவர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் கருணாநிதி என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அனைவரும் புகழாரம் சூட்டினர்.மேலும் திருநங்கைகள் இனிவரும் காலங்களில் அரசியலிலும் ஈடுபட்டு தங்களது முத்திரையை பதிக்க வேண்டும் என உரையாற்றினார்.நிகழ்ச்சியில் திருநங்கைகள் தங்களது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நடனம் அரங்கேறியது.