• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தேசிய பிரஸ் கவுன்சில்ஆஃப் இந்தியா தொடக்க தினம்..,

ஜனநாயகத்தின் நான்காவது தூணாம் பத்திரிகைத் துறைக்கு பலநேரங்களில் மொத்த ஜனநாயகத்தையும் காக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது; பத்திரிகையாளர்களுக்கும் இருக்கிறது.

தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர் 16 ஆம் நாளை தேசியப் பத்திரிகையாளர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

ஜனநாயகம் – சமத்துவம் – சமூகநீதி – மதநல்லிணக்கம் – மக்கள் நலன் ஆகியன எள்ளி நகையாடப்படும் இந்தச் சூழலில் இவற்றுக்காக போராட, வாதாட, எழுத, எழுதியபடி நிற்க வேண்டிய பெரும் பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு உண்டு. அதனை எந்த சமரசங்களுக்கும் இடமளிக்காத வகையில் பத்திரிகையாளர்கள் காக்க வேண்டும்!

உங்கள் வாழ்வில் உலக வாழ்வு அடங்கி இருக்கிறது; உங்களது வாழ்க்கையே பொதுவாழ்க்கை தான். அத்தகைய பொதுவாழ்க்கைக்கு வந்த பத்திரிகையாளர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்!

பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவன ஊழியர்கள், அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.