புதுவைப் பல்கலைக்கழக காரைக்கால் வளாக ஒருங்கிணைப்பாளர் முனைவர். வே. அருள்முருகன் அவர்களுக்கு “தேசிய நவோதயன் சூப்பர் விருது 2025” மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் நவோதயா முன்னால் மாணவர்களின் கூட்டமைப்பு நவ்சந்வத் பவுண்டேஷன் நடத்திய விருது வழங்கும் விழாவில் நவோதயா வித்யாலயா சமித்தி பூனே பிராந்தியத்தின் துணை ஆணையர் திருமதி.மேரி மணி அவர்களால் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மத்திய பிரதேச கொசங்கபாத் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தர்சன் சிங் சௌத்ரி, பல சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பல நவோதயா முன்னால் மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த விருது இருபத்தைந்து வருடங்களாக வணிகவியல் கல்வி மற்றும் சமூக சேவைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காகவும், சக நவோதய பள்ளிகளில் பயிலும் இந்நாள் முன்னாள் மாணவர்களுக்கு பல விதங்களில் இயன்ற உதவிகளை செய்து, அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் இருந்து வருவதால் கொடுக்கப்பட்டுள்ளது.
இவர் நவோதயா உள்ளிட்ட பல அரசு பள்ளி மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு ஆலோசனைகள் மற்றும் நவோதயா பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேருவதற்கான கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பல ஆண்டுகளாக ஆலோசனைகள் வழங்கி உதவி வருவது குறிப்பிடத்தக்கது.