• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இயற்கை சாயம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம்

BySeenu

Dec 14, 2024

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் இயற்கை சாயம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கில் 100க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள், சாயத் தொழிலாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

இயற்கை சாயத்தை கைத்தறி நெசவில் பயன்படுத்துவது மற்றும் அதன் பயன்கள் குறித்தான தேசிய அளவிலான கருத்தரங்கம் “Natural Dyeing And Handloom Products – Impact On Environment, Human Wellness And Business Innovation” என்ற தலைப்பில் கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக, ஐஐடி டெல்லி பேராசிரியர் தீப்தி குப்தா, National Board For Quality Promotion (NBQP) ஆலோசகர் வேணுகோபால், கொல்கத்தாவில் உள்ள JD பிர்லா இன்ஸ்டிடியூட் முதல்வர் தீபாளி சிங்கி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்வில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் Strategic Planning And Review இயக்குனர் ரகுபதி, KCT பிசினஸ் ஸ்கூல் தலைவர் மேரி செரியன், குமரகுரு கல்லூரி ஃபேஷன் டெக்னாலஜி துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், இயற்கை சாயம் குறித்த இந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் சமத்தூர், பொள்ளாச்சி, நெகமம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள், சாயத் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த கருத்தரங்கின் போது, குமரகுரு கல்வி நிறுவனங்களின் Strategic Planning And Review இயக்குனர் ரகுபதி தனது உரையில், செயற்கை சாயத்தின் பாதிப்புகள் குறித்தும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், இயற்கை சாயத் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசு அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, இயற்கை சாயம் குறித்து விளக்கப்படங்களுடன் பல்வேறு அமர்வுகள் நடைபெற்றன. மேலும் இந்த கருத்தரங்கில், இயற்கை சாயம் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளின் கண்காட்சியும் இடம்பெற்றது. கருத்தரங்கின் சிறப்பம்சமாக ஆயுர்டெக்ஸ் நிறுவனம் சார்பில், பதிமுகம், காசுக்கட்டி, துளசி, அதிமதுரம், கடுக்காய் உள்ளிட்ட இயற்கை பொருட்கள் கொண்டு நேரடியாக இயற்கை சாயம் தயாரித்து காட்டியது பங்கேற்பாளர்களுக்கு பயனுள்ள ஒன்றாக அமைந்தது.