கோவையில் 5 நாட்களாக நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை இந்தியன் வங்கி அணியும், பெண்கள் பிரிவில் கேரளா மின்வாரிய அணியும் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றனர்.

கோவை நேரு விளையாட்டு அரங்கில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றது. நாச்சிமுத்து கவுண்டர் மற்றும் சிஆர்ஐ கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழகம், கேரளா,கர்நாடகா டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.ஆண்கள்,பெண்கள் என தனித்தனி அனியாக நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றது.
இறுதி சுற்றில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் மின்சார வாரிய அணி மற்றும் தென்மேற்கு ரயில்வே அணி விளையாடியது.இதில் கேரளாவை சேர்ந்த மின்சார அணி அதிக புள்ளிகளை எடுத்து 75 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் சிஆர்ஐ கோப்பையை கைப்பற்றி தட்டிச் சென்றனர்.
அதேபோல ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி அணி மற்றும் இந்திய விமானப்படை அணி விளையாடியது.இதில் சென்னை இந்தியன் வங்கி அணி அதிக புள்ளிகளை எடுத்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பையை கைப்பற்றி தட்டிச்சென்றனர்.
.