• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நாகூர் ஆண்டவர் புத்தக வெளியீடு..,

ByR. Vijay

Oct 13, 2025

நாகூர் தர்காவின் 469 வது வருடாந்திர கந்தூரி விழா வரும் நவம்பர் 21ஆம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் துவங்க இருக்கிறது. பெருவிழவான சந்தனக்கூடு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி அதிகாலை நடைபெற இருக்கிறது.

அதனை முன்னிட்டு நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டி ஹாஜி எஸ் அபுல் பதஹ் சாகிப் அவர்கள் “கிழக்காசியாவின் பேரொளி” என்ற நாகூர் ஆண்டவர் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகத்தினை எழுதி இருந்தார். அதனை இன்று வெளியிட்டார். நாகூர் தர்கா அலுவலகத்தில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதல் பிரதியை தர்கா பரம்பரை டிரஸ்டியும் ஆலோசனை குழு தலைவருமான கலிபா சாஹிப் பெற்றுக் கொண்டார். புத்தக எழுத்தாளர் ஹாஜி எஸ் அபுல் பதஹ் சாகிப் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டி ஹாஜி காஜி ஷேக் ஹசன் சாகிப், ஹாஜி செய்யது ஹாஜா மொய்னுதீன் சாஹிப், முஹம்மது பாக்கர் சாகிப் மற்றும் பலர் உடன் இருந்தனர்.