நாகர்கோவில் மாநகராட்சி இயல்பு மாமன்ற கூட்டம் மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் தலைமையில் நடைப்பெற்றது .
மாநகராட்சி ஆணையர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தெருவிளக்குகள் அமைத்தல் குடிநீர் விநியோகம், குடிநீர் குழாய் உடைப்புகள் சரி செய்ய நிரந்தர தீர்வு காண வேண்டும் போன்ற அடிப்படை தேவைகளுக்கான கோரிக்கைகள் மாமன்றத்தில் கூறப்பட்டன. அதற்கான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மாதந்திர மாமன்ற கூட்டத்தில் பேசிய மேயர் மகேஷ்..,
குப்பை எடுத்த தனியார் நிறுவனத்திற்கு உள்ள பாக்கி தொடர்பாக மேல்முறையீடு செய்ய வழக்கறிஞர்கள் இடம் ஆலோசிக்கப்படும்.
நாகர்கோவில் மாநகராட்சி 1,2,3,50,51,52 ஆகிய வார்டுகளில் குடி நீர் திட்டத்திற்காக ரூ.64_கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வருகிற 30_ம் தேதி முதல் தொடங்கப்படும். மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருவிளக்குகளையும் 15 நாட்களுக்குள் முழுவதும் சரி செய்ய ஒப்பந்தம் காரருக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிபிட்ட அவகாசத்தில் தெருவிளக்கு பணிகளை நிறைவு செய்யாவிட்டால் இப்போது உள்ள ஒப்பந்தகாரரின் பணி ஒப்பந்தம் நீக்கப்பட்டு, புதிய ஒப்பந்த காரரை நியமிக்க வேண்டும் என்ற மாமன்ற அனைத்து கவுன்சிலர்களின் சம்மதத்துடன் புதிய ஒப்பந்தம் டென்டர் கோரப்படும் என அனைத்து உறுப்பினர்களின் கை ஒலிக்கு இடையே மேயர் மகேஷ் தெரிவித்தார்.

துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டலத்தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் துறைச்சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.