சங்கரன்கோவில் நகராட்சியை கலைத்துவிட்டு தனி அலுவலர் நியமிக்க வேண்டும்.
https://arasiyaltoday.com/book/at25072025
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி மீது நகர மன்ற திமுக, அதிமுக உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சங்கரன்கோவில் நகரில் உள்ள அரசு அலுவலகங்கள், சுவாமி சன்னதி, தெற்குரதவீதி, மெயின்ரோடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் சங்கரன்கோவில் நகராட்சியில் குதிரை பேர ஊழலை தடுத்திட சங்கரன்கோவில் நகராட்சியை கலைத்து விட்டு அடிப்படை வசதிகளை செய்வதற்கு தனி அதிகாரி உடனே நியமனம் செய்ய வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. சங்கரன்கோவிலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட வால்போஸ்டர்களால் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு காணப்பட்டது.