• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முக கவசம் அணிந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் – மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன்

ByKalamegam Viswanathan

Apr 2, 2023

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக் கவசம் அணியவில்லை என்றால் மருத்துவமனைக்குள் அனுமதி இல்லை, பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை நிலைகுலைய வைத்தது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்த நிலையில், விஞ்ஞான உலகின் தொடர் முயற்சியின் காரணமாக பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும், பல்வேறு வைரசுகள் உருவாகி மக்களை தொடர்ந்து அச்சுறுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுபோல், காய்ச்சல் பாதிப்பும் அதிகரிக்கிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்கள் இன்று முதல் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.


அதனைத் தொடர்ந்து இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் மருத்துவமனையில் மருத்துவர்கள் அதிகாரிகளுடன் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து உள்ளார்களா என்று ஆய்வு மேற்கொண்டார். அதே போல அறிவிப்பை பின்பற்றுவதற்கான முன்எச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, மருத்துவமனை வளாகத்தில் ஒலி பெருக்கிகள் மூலம் முககவசம் அணிவது குறித்தும், அரசு அறிவித்துள்ளது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


மேலும், இந்த நடைமுறையை சரிவர கடைபிடிப்பதற்கு, நுழைவு வாயில் பகுதியில் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள், முககவசம் குறித்து ஆய்வு செய்வார்கள். அதன்பின்னரே ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மதுரையில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. அதாவது நேற்று முன்தினம் மதுரையில் 4 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிவதன் மூலம் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படும். மருத்துவத்துறையினருடன், பொது மக்களும் முக கவசம் அணிந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டனர். என மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.