மதுரை ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ள சிலைமான் பகுதியில் மாநகராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை வாங்கி செல்வ கண்ணன் என்பவர் பிளாஸ்டிக் தரம் பிரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.

இதில் மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த பெத்துராஜ் (48) என்பவரும் உசிலம்பட்டி மூடுவார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (37) இருவரும் குடோனில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மது போதையில் இருவர் இடையே ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் அடித்ததில் பெத்துராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்துவிட்டு பாண்டி அங்கேயே தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த சிலைமான் போலீஸார் பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




