புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டையில் உதயநிதி பிறந்தநாள் விழா சைக்கிள் போட்டிகள். அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து பரிசுகளையும் வழங்கினார்.

வல்லத்திராகோட்டையில் திருவரங்குளம் தெற்கு திமுக ஒன்றிய இளைஞரணியின் சார்பில் துணைமுதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் 48ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரியவர்களுக்கு 10கிலோமீட்டர் தூரமும் சிறியவர்களுக்கு 5கிலோமீட்டர் தூரமும் என இரண்டு பிரிவாக சைக்கிள் போட்டிகள் நடத்தப் பட்டன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களில் முதல் பரிசு ரூபாய் 5ஆயிரம் இரண்டாம் பரிசு 4ஆயிரம், மூன்றாம் பரிசு 3ஆயிரம், நான்காம் பரிசு 2ஆயிரம் ரூபாய் என வழங்கப் பட்டன.

திருவரங்குளம் தெற்கு ஒன்றியச் செயலாளர் அரு.வடிவேல் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டிகளை ஒன்றியத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் பொறுப்பாளர்கள் இயல்.அரங்கண்ணல், குமரேசன், சுப்பிரமணியன், இயல்.தமிழ்வேந்தன், ராஜபெரியண்ணன், மணிகண்டன், நாராயணசாமி, பிரசாத், பச்சைபூமி பாலா, பிரபாகரன், ஆறுமுகம், சிவா, அவைத்தலைவர் சுரேஷ் முருகையன் உள்ளிட்ட பலரும் செய்திருந்தனர்.
போட்டிகளை கொடியசைத்துத் துவக்கி வைத்ததோடு சில ஊர்களுக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி விட்டு மீண்டும் வந்து போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளையும் அமைச்சர் மெய்யநாதன் வழங்கிச் சென்றார்.




