• Fri. May 10th, 2024

அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு

குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்து ஆணையர் மூலமாக ஒரு செயல்முறை ஆணையை பிறப்பித்துள்ளார். அந்த ஆணைப்படி இனி குமரி மாவட்டம் வழியாக 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றி செல்லக்கூடாது. 28 டன் எடைக்கு மேல் கனிம வளங்களை கொண்டு செல்லக்கூடாது. மேலும் கனிமவளங்கள் கொண்டு செல்ல 2 வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக மட்டுமே கனிம வளங்களை கொண்டு செல்ல வேண்டும். (வரைபடம்) அதாவது ஆரல்வாய்மொழியில் இருந்து செண்பகராமன்புதூர், துவரங்காடு வழியாக களியங்காடு வந்து வாகனங்கள் செல்ல வேண்டும். மேலும் காவல் கிணறில் இருந்து தோவாளை, வெள்ளமடம், அப்ட்டா மார்க்கெட், புத்தேரி இறச்சகுளம் வழியாக களியங்காடு வந்து செல்லலாம். குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலைகள் இல்லை. குறுகிய சாலைகள் தான் உள்ளன.

இந்த காரணமாக கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்து வருகிறோம். குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 36 குவாரிகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 7 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடியில் இருந்து அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும். இதுதொடர்பாக மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுதொடர்பாக லாரி உரிமையாளர்கள் மற்றும் குவாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிற 1-ந் தேதி(ஆகஸ்ட்) முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும். 3ஏற்கனவே கனிமவளம் கடத்தலை கண்காணிக்கும் வகையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. கோட்டார் போலீஸ் நிலையம் முன் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே லாரிகளை நிறுத்த வேறு இடம் பார்க்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொள் முதலை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். உற்பத்தியை பெருக்கும் வகையில் கறவை மாடுகள் வழங்க கடன் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது நிர்வாக ரீதியாக நல்ல நிலையில் ஆவின் நிர்வாகம் செயற்பட்டு வருகிறது. மின்சார செலவை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். ஆவின் நெய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. தரமான நெய்யை வழங்கி வருகிறோம். மக்கள் அதிகமாக வாங்குவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே செயல்பட்டு வரும் பால் கூட்டுறவு நிலையங்களை மேம்படுத்தவும், புதிதாக கூட்டுறவு நிலையங்கள் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யப்பட்ட பாலுக்கு உடனடிகாக பாக்கி தொகை வழக்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்துக்கு ஒருமுறை பாக்கி தொகை வழங்கப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மேயர் மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *