இந்திய சட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும். சட்டமாமேதை அம்பேத்கரது சிலை
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடல் முன்புறம் உள்ள சிலைக்கு. தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தமிழ் நாடு அரசு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் சுரேஷ்ராஜன் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோதங்கராஜ்.
ஏழ்மையை போக்க கல்வி ஒன்றே வழித்தடம் என்பதை அவர் வாழ்வில் சாதித்துக் காட்டிய அம்பேத்கர் உருவாக்கிய சட்ட வடிவமே நம் நாட்டின் அனைத்து நிலை மக்களும் வழி காட்டி என்று தெரிவித்தவர்.

தமிழகத்தில் திராவிட வழி ஆட்சி நடத்தும் முதல்வர் தமிழகத்தில் உள்ள எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தினமும் உழைத்து வருகிறார் என தெரிவித்தார்.
இன்று காலை முதலே பல்வேறு அமைப்பினர் சமூக ஆர்வலர்கள் என பலரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.




