குமரி மாவட்டம் இராஜாவூரை சேர்ந்த இக்னேஷியஸ் டெலஸ் புளோரா தமிழகத்தில் முதல் மேஜர்ஜெனரல் (இந்திய இராணுவத்தின் செவிலியர் பிரிவில்) பதவி உயர்வு பெற்றவருக்கு ஜானதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு குமரியை சேர்ந்த மேஜர் ஜெனரல் இக்னேஷியஸ் டெலஸ் புளோரா-வுக்கு “நைட்டிங்கேல் விருது வழங்கினார். இந்த நிகழ்வில் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

குமரி மண்ணின் மகளுக்கு இராணுவ துறையில் உயர் விருதான நைட்டிங்கேல் விருது பெற்றவருக்கு, கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய்வசந்த் உட்பட பலரும் வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.
