• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பகவதி அம்மன் கோவிலில் மண்டகப்படி முறை கொண்டு வர வேண்டும் -பாலபிராஜதபதி அடிகளார்

மண்டைக்காடு பகவதிஅம்மன் கோவிலில் மண்டகப்படி முறை கொண்டு வர வேண்டும் எனமகா பூஜித குரு பாலபிராஜதபதி அடிகளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலிடம் கோரிக்கை மனு.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடியேற்றம் மார்ச் 5ம்தேதி நடக்க இருக்கும் நிலையில்.குமரி மாவட்டத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் ஒவ்வொரு நாளும் வெளியிடும் அறிக்கைகள், சுவர் ஒட்டிகள் ஏற்படுத்தும் பரபரப்பு செய்திகளுக்கு மத்தியில். சுவாமி தோப்பு அய்யா வழி சமுகத்தின் மகா பூஜித குரு பாலபிராஜதபதி அடிகளார். தமிழக முதல்வர், மற்றும் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற சபாநாயகர்,குமரி ஆட்சியர் ஆகியோருக்கு.மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மண்டகப்படி முறை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.மண்டைக்காடு பகவதிஅம்மன் கோவிலில் மண்டகப்படி முறை கொண்டு வர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலிடம் ஒரு கருத்தை உதராணங்களுடன் மனுவாக கொடுத்துள்ளது குறித்து தெரிவித்தவை.
. மண்டைக்காடு கோவிலில் பாரம்பரிய கொடை விழாவினை பண்டைத் தமிழர் பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டும். இந்து நாடார்களுக்கு குலதெய்வமாக விளங்கும் அம்மனுக்கு முழுக்க முழுக்க ஆரிய ஆதிக்க முறைப்படி முறைகளை முன்னெடுப்பது ஏற்புடையதல்ல. ஆதிக்கம் செலுத்திய திருவிதாங்கூர் மனுதர்ம வழி அரசு கோவிலை கையகப்படுத்திய பின்னால்தான் தமிழ் மரபு முற்றிலும் அகற்றப்பட்டது .திருத்தமிழர் போராட்டம் நடத்தி தமிழ் மரபுக்காக தியாகங்கள் பல செய்து தாய் தமிழகத்துடன் குமரி மாவட்ட பகுதி இணைக்கப்பட்டது . கோயில்கள் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையுடன் இணைக்கப்பட்டது .ஆனால் கோவிலின் நடைமுறை ஆரிய மனுதர்ம ஆதிக்கத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது . தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் தவிர பிறபகுதிகளில் அனைத்து கோவில்களிலும் மண்டகப்படி முறை நடைமுறையில் உள்ளது. திருச்செந்தூர் கோவில் ,பாபநாசம் கோவில், தென்காசி கோவில் போன்ற அனைத்துகோவில்களிலும் நடக்கும் விழாக்களை மண்டகப்படி கட்டளைகாரர்களே கால காலமாக நடத்தி வருகிறார்கள். அங்கெல்லாம் ஒரு நாள் திருவிழா நடத்தும் உரிமை நாடார் சமூகத்திற்கான மண்டகப்படிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது . இதுபோல் மண்டைக்காட்டிலும் பண்டை முறை பின்பற்ற வேண்டும். இந்து நாடார்களுக்கு மண்டகப்படி வழங்கப்பட வேண்டும். முதல் நாள் கொடிக்கயிறு கொடுக்கும் மரபினை தொடர்ந்து ஒன்றாம் திருவிழா மண்டகப்படியினை நாடார் சமூகத்திற்கு தமிழக அரசு வழங்க வேண்டும். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் திருவிழா வின் போது கொடி கயறு கொடுக்கும் உரிமை ஒரு கிறிஸ்தவ குடும்பத்தின் உரிமையாக இன்று வரை தொடர்கிறது.பிறர் சமூகங்களுக்கும் உரிய மண்டக படிகளை வழங்க வேண்டும்.
முதல் நாள் திருவிழாவை உலகம் வியக்கும்வண்ணம் தான தர்மங்கள், மலர் அலங்காரங்கள், சிறப்பு நாதஸ்வர கச்சேரிகள், தமிழிசை நிகழ்ச்சிகள், வான வேடிக்கையுடன் கொண்டாட தயாராக உள்ளனர். மண்டைக்காடு பொன்னம்மை நாடாத்தி பெயரால் நாடார்கள் சமூகம் தன் குல தெய்வத்திற்கு சிறப்பு செய்ய தயாராக உள்ளது.
.எனவே தமிழக முதல்வர்மு.க. ஸ்டாலின் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக்கொடுள்ளேன் என தெரிவித்தார் மகா குரு பால பிரஜாபதி அடிகளார். தெரிவித்தார்.