காஷ்மீர்-கன்னியாகுமரி முதல் எலக்ட்ரிக் பேருந்தின் நீண்ட பயணம் (அக்டோபர்.04_18) மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் குமரியில் கொடி அசைத்து வரவேற்றார்.
இந்தியாவில் பல்வேறு அமைப்புகள், அரசியல் இயக்கங்கள். ஒரு சாதனை பயணமாக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் செல்வது போன்று, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வருவது கடந்த காலங்களில் பல நிகழ்வுகள் நடந்துள்ளது.


அந்த வகையில் காஷ்மீரில் இருந்து கனியாகுமரிக்கு முதல் முறையாக எலக்ட்ரிக் பேருந்து ஒன்று, அதன் பயணத்தை அக்டோபர் மாதம் 04_ம் தேதி ஜம்மு ஸ்மார்ட் சிட்டியி பகுதியில் இருந்து கன்னியாகுமரி நோக்கிய பயணத்தை தொடங்கி, இன்று பிற்பகல் (அக்டோபர் 18) பிற்பகல் கன்னியாகுமரி சீரோ- பாயின்ட் பகுதியில் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்,கொடி அசைத்து எலக்ட்ரிக் பேருந்தை வரவேற்றார். பேருந்தில் அமர்ந்து சிரிய தூரம் பயணித்தார்.



கன்னியாகுமரியில் உள்ள புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளும் எலக்ட்ரிக் பேருந்தில் பயணித்தனர். விஜய் வசந்த் இந்தியாவில் ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் எலக்ட்ரிக் பேருந்துகள் மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது என்றாலும், காஷ்மீரில் இருந்து முதல் முறையாக எலக்ட்ரிக் பேருந்து ஒன்று கடந்த 04_ம்தேதி ஜம்முவில் இருந்து புறப்படும் 4000_ம் கிலோமீட்டர் தூரம் பயணத்தில். பெரிதும், சிறிதும் ஆன நகரங்கள் வழியாக இன்று இந்தியாவின் தென் எல்லையான
கன்னியாகுமரியில் எலக்ட்ரிக் பேருந்தை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

நிகழ்வில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், வார்ட் கவுன்சிலர், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் தாமஸ் மற்றும், புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்றார்கள்.
