மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரம், சின்ன உடைப்பு கிராமத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சின்ன உடப்பு கிராம மக்கள் மதுரை விமான நிலைய நில ஆர்ஜித பணிக்கு தடை கோரி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மீள்குடி அமர்வு மாநகராட்சி பகுதிக்குள் இடம் உள்ளிட்டவை வழங்கிய பிறகு நிலத்தை கையகப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இன்று காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் வந்த அதிகாரிகள் கிராம மக்கள் தொடர் போராட்டத்தால் ஒரு வார கால அவகாசம் கொடுப்பதாக தெரிவித்து அங்கிருந்து சென்றனர்.
ஆனால் மக்களின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்காத நிலையில் ஐந்தாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் நேற்று இரவு 7 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் வீட்டிற்கு சென்றனர்.
தற்போது இன்று காலை தேர்வு நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு கூட அனுப்பாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கிராம மக்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் நில கையகப்படுத்துதல் தொடர்பாக அவசர வழக்கு பதிவு செய்யவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.