கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவிலிருந்து தாய் தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட தியாகிகளில் ஒருவர் மார்ஷல் நேசமணி இவருடைய 56 வது நினைவு ஆண்டு இன்று குமரி மாவட்டத்தில் அனுசரிக்கப்படுகிறது இதை ஒட்டி நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு உள்ள அவரது திரு உருவ சிலைக்கு குமரி நாடாளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் வேப்பமூடு சந்திப்பில் உள்ள மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு நாடாளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், ஐஎன்டியூசி கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார், மண்டல தலைவர்கள் சிவபிரபு, செல்வன், டாக்டர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
