மாணவ, மாணவிகளுக்கு குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
நாஞ்சில் கேர் அகாடமி சார்பில் சிறந்த மாணவ மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்ச்சி அழகியமண்டபத்தில் உள்ள அன்னை ஏடிஎ சென்டரில் நடைபெற்றது. கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், விஜய்வசந்த் எம் பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், பள்ளிகளுக்கு இடையே 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், மற்றும் சிறந்த பள்ளிகளுக்கு விருது வழங்குதல் மற்றும் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்கம் மற்றும் சில்வர் மெடல் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், விஜய்வசந்த் எம் பி கலந்து கொண்டு தங்க பதக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் ஏழை பெண்களுக்கு அகாடமி சார்பில் வழங்கப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கினார்.

நாஞ்சில் கேர் அகாடமி தலைவர் ஜோஸ் ராபின்சன் வரவேற்புரையில் காங்கிரஸ் வட்டார தலைவர் பிரேம்குமார், அன்னை எடிஎ சென்டர் நிர்வாகிகள் ஆண்ட்ரூஸ், பவதாரணி, முன்னாள் மேலாளர் மரிய ராஜேந்திரன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.
