• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சாதனை படைத்தவர்கள் பலரை தன்னகத்தே கொண்ட குமரி.

நாடக காவலர் என்ற புகழுக்கு அன்றும், இன்றும் ஒற்றை அடையாளமாக இருப்பவர்
அண்ணாச்சி டி.கே.சண்முகம். இவரது பட்டறையில், நடிப்பில் குருகுல பயிற்சி பெற்றவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன்.

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவரது துணைவியார் மதுரம். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களில் சிரிப்பு மட்டுமே அல்ல சிந்தனையையும் ஏற்படுத்தும் திரைப்படங்கள். திரை இசை திலகம் கே.வி.மகாதேவன், இயக்குநர்கள் காசிலிங்கம், காந்தி ராமன் என ஒரு நீண்ட வரிசையில். பிற்காலத்தில் வந்து சேர்ந்தவர் தான்.
சாமிதோப்பை சேர்ந்த இயக்குநர் பி.சி.அன்பழகன். இவர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.

தமிழகத்தை பொருத்த மட்டில் சினிமாவும், அரசியலும் இரண்டு தண்டவாளம் போன்று ஒன்றாக பயணிப்பதின் எதிரொலியோ,என்னவோ.!?

பசலியான் நசரேத் இளமைக்காலத்தில் இவரது அரசியல் பயணம் தி.மு.க.வில் தொடங்கியது. பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் பசலியான். சமூக பார்வையும், அல்லல் படுபவர்களை பாது காக்கும் கருணை கரங்களும் கொண்டவர். உலகின் 10_க்கும் அதிகமான நாடுகளில் முதியோர் இல்லம் நடத்தி வருகிறார்.

அரசியலில் ஆர்வம் உடையவர்களுக்கு மக்களுக்கு பொது சேவை செய்ய அரசியலில் ஒரு அங்கிகாரமான பதவி வேண்டும் என்பது, அரசியல் வாதிகளிடம் இயற்கையாகவே
ஏற்படும் ஆசை.

இதற்கு பசலியான் நசரேத்தும் மட்டும் விதிவிக்கு அல்ல.
அமைச்சர் மனோதங்கராஜின் உதவியை நாடினார். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி கிடைத்துவிடும் என நம்பினார். நசரேதின் ஆசை கானல் நீரானாது.

நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி கிடைக்காத ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாத நிலையில். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரத்தை இவர் சந்தித்த அடுத்த நாள் தலைநகர் சென்னையில்.கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி க்கு பூ கொத்து கொடுத்து கட்சியில் சேர்ந்த அன்றே, கட்சியின் பொதுச்செயலாளரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் கொடுத்த வாக்குறுதி.

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் கன்னியாகுமரி மக்களவையில்
அதிமுக வேட்பாளர் பசலியான் நசரேத் தான் என்று உறுதி கொடுத்தார்கள்.

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் மூன்று முனை போட்டியில். விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பில் லட்சம் வாக்குகளுக்கு மேலாக பெற்று வெற்றி பெற்றார். பொன்னார் பாஜக சார்பில் இரண்டாம் இடத்திலும், பசலியான் நசரேத் மூன்றாம் இடமும் பெற்றார்.

அரசியலில் வெற்றி தோல்வி சகஜம் என்பதை உணர்ந்த பசலியான். திமுகவில் இருக்கும் போதே அவரது மகனை தயாரிப்பாளராக கொண்டு
குட்நைட் லவ்வர்ஸ் என இரண்டு படங்களை தயாரித்து வெற்றி பெற்ற நிலையில்.

தேர்தல் தோல்விக்கு ஒத்தடம் கொடுக்கவும், ஏற்கனவே தயாரித்த
இரண்டு படங்கள் வெற்றி பெற்ற நிலையில். மகனோடு சேர்ந்து டூரிஸ்ட் பேமிலி என்ற திரைப்படம். இலங்கையில் இருந்து கடவு சீட்டு இல்லாமல் தமிழகம் வந்த ஒரு தமிழ் குடும்பம் சந்தித்த சோதனைகளை அப்படியே ரசிகர்கள் முன் வரிசை படுத்தியது.

படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவர்களது பங்கை(நடிப்பை) வெளிப்படுத்தியது. அண்மையில் தமிழ் சினிமா பெறாத மாகத்தான வரவேப்பை டூரிஸ்ட் பேமிலி பொற்றது மட்டுமே அல்ல இவர் தயாரித்த மூன்று படங்களும் தொடர் வெற்றி பெற்றதை பாராட்டு வகையில்.

குமரியில் இயங்கும் இந்திய பாரம்பரிய கலை, இலக்கிய பேரவையின் சார்பில்
அதன் தலைவர் சிவானி சதீஷ். இந்தியாவின் 79_து சுதந்திர கொண்டாட்ட நாளில். பசலியான் நசரேத்துக்கு குமரியை சேர்ந்த திரைப்பட இயக்குனர் நாஞ்சில்
பி.சி. அன்பழகன் விருது வழங்கி கெளரவித்தார்.

நிகழ்வில் அய்யா வழி பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளார், வழக்கறிஞர்
என். பார்த்தசாரதி,பேராசிரியர் தர்ம ரஜினி, கருங்கல் கண்ணன் ஆகியோர்
குமரி மண்ணின் மைந்தர் பசலியான் நசரேத்தை பாராட்டினார்கள்.