• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குமரி காங்கிரஸ் கட்சியின் கோட்டை, மீண்டும் உறுதிபடுத்திய விளவங்கோடு இடைத்தேர்தல்.

குமரி மாவட்டம் நாட்டின் விடுதலை போரில் ஈடுபட்ட மாவட்டம். சுதந்திரம் பெற்றபின் தாய் தமிழ் உரிமையை பெற இரண்டாவது உரிமை போராட்டத்தில், குமரி தந்தை மார்சல் நேசமணியின் தலைமையில் போராடி வெற்றி பெற்ற மாவட்டம். (குமரி தந்தை மார்சல் நேசமணியின்130_வது பிறந்த நாள் இன்று,ஜூன்_12)

விஜயதரணி மூன்று முறை காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவருக்கு எற் பட்ட சிந்தனை சோதனை மக்கள் தனக்குத்தான் வாக்களிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு அல்ல என அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த போது வெளியிட்ட அறிக்கை.

இந்திய நாடாளுமன்றத்தின் 18_வது தேர்தலின் போது. குமரி மாவட்டத்தில் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கும் வாக்கு பதிவு நடந்தது.

காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர், அதிமுக என அனைத்துக் கட்சிகளிலும் பெண்கள் களம் இறக்கப்பட்டனர்.

விளவங்கோடு சட்டமன்றத்தில் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்ட விஜயதரணி வாங்கிய வாக்குகளை விட கிட்டத்தட்ட 3000_க்கும் அதிகமான வாக்குகளை வாங்கினார். இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட். இரண்டாம் இடத்தில் பாஜக, மூன்றாவது இடத்தில் நாம் தமிழர், நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது அதிமுக.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தாரகை கத்பத்க்கு. தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு இன்று மதியம் 12 மணிக்கு (ஜூன்.12) சட்டமன்ற அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நிலை பெண்களிடம் அவர்களது மக்கள் பிரதிநிதியை எப்படி தேர்வு செய்தீர்கள் என்று தமிழ், மலையாள மொழி பேசும் மக்களிடம் கேட்டபோது கிடைத்த ஒற்றை பதில்.

காங்கிரஸ் கட்சிக்கு தான் எங்கள் வாக்கு. போட்டி இடும் தனி நபரை பார்த்து அல்ல என்ற பதிலோடு. பெண்கள் பலரிடம் கருத்து கேட்ட போது. தமிழர்கள் கை சின்னத்திற்கு தான் எங்கள் வாக்கு என சொன்ன மாத்திரத்தில் அங்கிருந்த மலையாள மொழி பேசும் பெண்கள் சொன்ன வார்த்தை ஜங்கட வாக்கு கை பத்திக்கு என மலையாளம் கலந்த தமிழில் சொன்னார்கள்.