கவியரசர் கண்ணதாசன் சேலம் மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் மாத சம்பளத்தில் பணியாற்றிய போது,அங்கு, கவிஞரை போலவே மாத ஊதியத்தில் நடிகையாக பணியாற்றிய ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டதாம். அந்த பெண் குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஒழுகினசேரி பகுதியை சேர்ந்தவர் (கவிஞரின் நினைவு போற்றும் நாள் நிகழ்ச்சியில் முத்தா சீனிவாசன் பேசியது) (கலைவாணரும் இதே பகுதியை சேர்ந்தவர்).
கண்ணதாசனுக்கு குமரியை சேர்ந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கலைவாணர், திரை இசைத்திலகம் மகாதேவன் ஆகியோர் உயர்ந்த மதிப்பு மிக்க நபர்கள்.
நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த குமரி தந்தை மார்சல் நேசமணி மறைவால் 1969_நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில், பெரும் தலைவர் காமராஜர் போட்டியிட்டபோது காமராஜருக்கு தேர்தல் பரப்புரை செய்வதற்காக வந்த கவியரசர், சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் இருவரும் கன்னியாகுமரியில், மலையாள திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மெரிலான்ட் சுப்பிரமணியம் இல்லத்தில் 45_நாட்கள் தங்கி பெரியவருக்கு தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர்.
மதியம் உணவுக்கு பின் ஒரு ஓய்வு, சிரிய தூக்கத்திற்கு கவிஞர் தேர்ந்தெடுத்த இடம்.
நாகர்கோவிலில் உள்ள தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் கொல்லா மரங்கள் அடர்த்தியாக குடை நிழல் போன்ற பகுதியை கல்லூரி சூழல் கவிஞர் மனதை ஈர்க்க, கவியரசரின் மகன் காந்தி அவரது பட்டப்படிப்பை நாகர்கோவிலில் தென் திருவிதாங்கூர் கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்து கற்றார்.
1969_நாகர்கோவில் இடைத்தேர்தல் நடந்த காலம் என்பது தமிழகத்தில் மதுவிலக்கு இருந்த நேரம் கேரளாவில் மது விலக்கு கிடையாது.
கவியரசர் மொழியில் மருந்து(மது)என்றே சொல்வார். இருப்பு தீர்ந்து விடும் நாளில் கவியரசரின் கார் களியக்காவிளையை தாண்டி சிறிது தூரம் பயணிக்கும்.
குமரியில் கவியரசர், ஜெயகாந்தன் இருவரை கவனித்து கொள்ள பெரியவர் பரிந்துரைத்த நபரான தர்மநாதனிடம் களியக்காவிளையை கடக்கும் முன் காரில் உள்ள காங்கிரஸ் கொடியை கழற்றி விடுங்கள் என கவிஞர் சொல்வதை ஒரு நாள் கூட மறந்தது கிடையாதாம்.
கவியரசரும் ஜெயகாந்தனும், கவிஞரின் மகன்கள் காலையில் நீராடுவது, கன்னியாகுமரிக்கு சற்று தொலைவில் உள்ள நரிக்குளத்தில்.