• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காத்ரினா கைப் திருமண நிகழ்ச்சி அமேசான் பிரைம் தளத்தில் ஒளிபரப்ப ஒப்பந்தம்

நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கெளஷல் திருமணம் ராஜஸ்தானில் நாளை பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இத்திருமணத்தில் கலந்து கொள்ள வரும் யாரும் போட்டோவோ அல்லது வீடியோவோ எடுக்கக்கூடாது என்று கத்ரீனா தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

தனது திருமணம் எப்போதும் தனிப்பட்ட ஒன்றாக இருக்கவேண்டும் என்று கத்ரீனா கைஃப் விரும்பினார். எனவேதான் தனது காதலைக்கூட கடைசி வரை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார். கத்ரீனா கைஃப் திருமண நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய ஒடிடி தளம் ஒன்று ரூ.100 கோடி தர முன் வந்திருப்பதாக செய்தி வெளியானது. அந்நிறுவனத்துடன் கத்ரீனா கைஃப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். தற்போது இதில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அமேஸான் பிரைம் நிறுவனம் கத்ரீனாவின் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய ரூ.80 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. எனவேதான் திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் யாரும் வீடியோ அல்லது போட்டோ எடுக்கக்கூடாது என்று கத்ரீனா கைஃப் உத்தரவாதம் பெற்றது தெரிய வந்துள்ளது.


திருமணத்திற்கு தயாராகும் கத்ரீனா திருமணத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் தங்களது மொபைல் போன்களை அவர்கள் தங்கியிருக்கும் அறையிலேயே வைத்துவிட்டு வரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக விருந்தினர்களிடம் கத்ரீனா கைஃப்-விக்கி கெளஷல் ஜோடி கேட்டுக்கொண்டுள்ளது.

அமேஸான் பிரைமில் வெளியாவதற்கு முன்பு யாரும் தங்களது திருமண புகைப்படங்களையோ அல்லது வீடியோவையோ வெளியிட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கத்ரீனா திருமண வீடியோ அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமேஸான் பிரைமில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கத்ரீனா திருமணம் முடிந்தவுடன் தேனிலவு செல்லாமல் உடனே படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பை முடித்த பிறகு கத்ரீனாவும், விக்கியும் தேனிலவு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு நடிகை பிரியங்கா சோப்ரா தனது திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை தனியார் ஒடிடி தளத்திற்கு விற்பனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.