• Sat. May 4th, 2024

தேசிய நெடுஞ்சசாலையில் கரணம் தப்பினால் மரணம்..!

BySeenu

Dec 21, 2023
கோவை  - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுந்தராபுரத்தில் பாலாஜி மருத்துவமனை எதிரில் சாலை வெட்டப்பட்டு பள்ளமாக இருப்பதால், கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அந்தச் சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் தெரிவித்ததாவது..,
இந்தப் பள்ளத்தில் பலர் விழுந்து காயம் அடைகின்றனர். சிறு குழந்தைகள் கூட பாதிக்கப்படுகின்றனர்.  இதனை தேசிய நெடுஞ்சாலை மாநில பிரிவு கோட்ட பொறியாளர் செல்வம் மற்றும் பொள்ளாச்சி சாலை துணை பொறியாளர் கணேசமூர்த்தி இருவரிடமும் கடந்த 6ஃ12ஃ2023 அன்று தெரிவித்தோம். ஒரு உயிர் பலி நடக்கும் முன்பு இந்த சாலையை சரி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் இன்றுவரை இதனை சரி செய்ய நெடுஞ்சாலை துறை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.   
இதனையடுத்து, நேற்று மாலை சுமார் 7 மணி அளவில் இந்த வழியாக வந்த கார் ஓட்டுநர் சாலையின் பள்ளத்தை பார்த்ததும் உடனடியாக பிரேக் போட பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் அந்த காரில் மோதி தூக்கி வீசப்பட்டனர். அதிர்ஷ்டவஷமாக அந்த இளைஞர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.  தலை சாலையில் மோதி இருக்குமானால் அந்த இளைஞர்கள் சாலையிலேயே உயிரிழந்திருப்பார்கள். 
ஆகவே, கரணம் தப்பினால் மரணம் என்று உயிர்களைப் பலி வாங்கத் துடிக்கும் இந்த நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *