இன்று ஆடி அமாவாசை(ஜூலை_04) நாளில். இந்து மதத்தினர் குறிப்பாக ஆடி அமாவாசை நாளில். கடல், நதி, ஆறு போன்ற நீர்நிலைகளில் புனித நீராடுவது தொன்று தொட்டு இருந்து வரும் அய்தீகம். இந்த நாளில் அவரவர் குடும்பங்களில் உள்ள மறைந்து போனவர்களின் நினைவாக, புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத கர்ம பூஜை செய்ய இன்று அதி காலை முதலே மக்கள் கன்னியாகுமரி முக்கடல் பகுதியில் ஆயிரக்கணக்கில் ஆண், பெண்கள் என பெரும் கூட்டமாக கூடினார்கள்.

மறைந்த முன்னோர்கள் நினைவாக புரோகிதர்கள் முன் பூஜை செய்தனர். பச்சரிசி, எள்ளு, பூக்கள், தர்ப்பை புல் போன்றவற்றை சிரியா வாழை இலை துண்டுகளில் வைத்து தலையில் வைத்தவண்ணம் சென்று கடல் நீரில் மூழ்கிய நிலையில் பூஜை பொருட்களை கடல் நீரில் விட்டு விட்டு மீண்டும் கடல் நீரில் சிறிது நேரம் மூழ்கி எழுந்த பின் கரை திரும்பினார்கள்.
கன்னியாகுமரி முக்கடல் எதிரே மக்கள் கடல் போல் இன்று காலை பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

காவல்துறை கடலில் நீராடிய பக்த்தர்களிடம். கடலின் ஆழமான பகுதிக்கு செல்லாதீர்கள். எதிர்பாராத விபத்து ஏற்படலாம் எச்சரிக்கையாக,பாதுகாப்பாக புனித நீராடுங்கள் என காவல் துறை தொடர்ச்சியாக ஒலி வாங்கி மூலம் எச்சரிக்கை விட்டனர்.
கடற் கரை பகுதியில் மக்கள் முண்டி அடித்து செல்லாதிருக்க ஆங்காங்கே தடுப்பு வேலி அமைந்திருந்தது.









