கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் தேரோட்டம் மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் வடம் பிடித்து இழுத்தார்கள்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் 10 ம் திருநாள் தேரோட்டம் இன்று காலை (ஜூன்_8)ம் தேதி காலை 9.45.,க்கு தொடங்கியது.

தேரோட்டத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்
தளவாய் சுந்தரம் மற்றும் ஏராளமான பக்தர்கள் தேரின் திருவடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தேரோட்டம் விழாவில் உள்ளூர் மக்களுக்கு இணையாக பல்வேறு மொழி பக்தர்களும் தேர் வடம் பிடித்து இழுத்தனர். பரமசிவன் சிவ தாண்டவம் போன்ற சிலையின் அமைப்பு அனைவரையும் ஈர்த்தது.
தேர் முத்தாரம்மன் கோவில் அருகில் வந்த போது சில இளைஞர்கள். தெப்பக்குளத்திற்கு தண்ணீர் விடாமல் அரசு அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.பக்தர்கள் தேர் நிற்கும் இடத்திலே விட்டு, விட்டு தரையில் அமருங்கள் என கேட்டுக் கொண்டதால். அந்த இடத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அடிக்கும் வெயிலின் அனலில் தேரை வீதியில் விட்டு விட்டு சென்று விட்டால், தேர் எப்போது நிலைக்கு வரும் என்ற விவாதமும் இரு பாலரிடம் ஏற்பட்டாலும். தேர் நிலைக்கு வந்துவிட்டது.