மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீரேத்தான் வளையல்கார தெருவில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கடந்த 48 நாட்களும் தினசரி காளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது.

தொடர்ந்து மண்டல பூஜை விழா கோவிலில் நடைபெற்றது இதில் பால் தயிர் நெய் இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. தீபாராதனை நடைபெற்றது. மண்டல பூஜையை முன்னிட்டு சிறப்பு யாகமும் நடைபெற்றது. வாடிப்பட்டியின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.













; ?>)
; ?>)
; ?>)