• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் “பிரதர்” திரைப்படம்

Byஜெ.துரை

Dec 6, 2024

ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், “பிரதர்” திரைப்படம், ZEE5 இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

சமீபத்தில் வெளியான“பிரதர்” திரைப்படம், குறுகிய காலத்தில்,100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது.

தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில்,காமெடி, பொழுது போக்கு திரைப்படமாக ZEE5 இல் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி பிரதர் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடம், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ZEE5 இல் வெளியான வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

கமர்ஷியல் காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ள ‘பிரதர்’ திரைப்படத்தில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து, குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான இப்படம், தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களை மிகவும் கவர்ந்த இப்படம் தற்போது ZEE5 தளத்தில் நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.

காதல், பாசம், சென்டிமென்ட் கலந்து வெளியான பிரதர் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இவரது இசையில் அமைந்த மக்காமிசி பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது. இயக்குநர் ராஜேஷ் தனக்கே உரிய பாணியில், கலக்கலான காமெடியுடன் குடும்பங்கள் ரசிக்கும்படி, இப்படத்தை இயக்கியுள்ளார்.