• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கோவையில் இன்று ஜல்லிக்கட்டு திருவிழா!!!

BySeenu

Apr 27, 2025

கோவையில் 800 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று நடக்கிறது.

கோவை மாவட்டம் நிர்வாகம் தமிழர் பண்பாடு ஜல்லிக்கட்டு பேரவை ஆகியவை சார்பில் கோவை செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக எல் அண்ட் டி பைபாஸ் சாலை அருகே 60 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டு 6,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரம்மாண்ட கேலரிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பாதுகாப்பு வசதிகளுக்காக போலீசார் கண்காணிப்புடன், 50 கேமராக்கள், மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் முன்னிலை வகிக்கிறார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்காக கோவை செட்டிபாளையம் எல் அண்ட் டி பைபாஸ் பகுதியில் 60 ஏக்கர் மிக பிரம்மாண்டமான மைதானம் உருவாக்கப்பட்டு உள்ளது. போட்டியில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 மேற்பட்ட காளைகள் 500 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். போட்டியில் முதல் பரிசு பெறும் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு மாருதி ஸ்விப்ட் கார் முதல் பரிசாக வழங்கப்படுகிறது. இரண்டாவது இடம் பிடிக்கும் காளை மற்றும் வீரருக்கு மோட்டார் சைக்கிள், மூன்றாவது இடம் பிடிக்கும் காளை மற்றும் வீரருக்கு ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது.

மேலும் சிறந்த காளைகள் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயங்கள் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

போட்டியை காண சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கார் பார்க்கிங் வசதி, ஆம்புலன்ஸ் செல்ல தனி வழி, தனியார் மருத்துவமனையுடன் இணைந்து மிகப்பெரிய மருத்துவம் முதலுதவி மையம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் காளையர்களின் உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்களுக்கு இரு வேலை உணவு மற்றும் பொதுமக்களுக்கு மத்திய உணவு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவையினர் தெரிவித்து உள்ளனர்.

முதல் காளையாக கோவை வரதராஜ பெருமாள் கோவில் காளை களம் இறங்கியது. முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மாநகராட்சி ஆணையாளர் கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோவை மேயர் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகின்றனர்.