• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

எஸ்.எம்.எஸ் கலைக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம்..,

ByK Kaliraj

Mar 10, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எஸ்.எம்.எஸ் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

எஸ்.எம்.எஸ் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் இன்று (10.03.2026) சர்வதேச மகளிர் தினம் உற்சாகமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். மேலும் டாக்டர் சண்முகபிரியா அவர்கள் கலந்து கொண்டு பெண்களின் கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் பெண்களின் அதிகாரமூட்டல் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

கல்லூரி முதல்வர் செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெண்களின் சமூக பங்கு, கல்வியின் முக்கியத்துவம், பெண்கள் தன்னம்பிக்கையுடன் பல்வேறு துறைகளில் முன்னேற வேண்டிய அவசியம் போன்றவை குறித்து பேசப்பட்டது. பெண்கள் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவது குறித்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டது.

மேலும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவியர்களுக்கு விழிப்புணர்வு உரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் பெண்களின் சமூக முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற உறுதிமொழியுடன் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.