• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தனியார் வேலை வாய்ப்பு பெற ஆர்வம்- அமைச்சர் முத்துசாமி பேட்டி…

BySeenu

Dec 2, 2023

கோவை ஆர்.எஸ். புரம் – மாநகராட்சி கலையரங்கத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமை, தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். தொடர்ந்து காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,மாநகராட்சி ஆணையர் சிருகுருபிரபாகரன்பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவை மேயர் கல்பனா ஆனந்த் குமார்,திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்,

இதனை தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது..,

முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி உள்ளோம்.அதற்கு தேவையான தரவுகளை பெற்றுத்தர பலவகைகளில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் குடும்பத்தினர் மருத்துவ வசதி பெற ஏதுவாக இருக்கும்.5லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு பெறலாம்.52 பொது மருத்துவ சிகிச்சை பெறலாம்.

6″வித அறுவை சிகிச்சை பெற முடியும். குடும்ப ஆண்டு வருமானம் உயர்த்த முடியுமா என்ற கேள்விக்கு சிறப்பு முகாம் அதற்கு தீர்வு காணப்படும். குடும்ப அட்டை தாரர்கள் பொங்கல் பரிசு, பணமாக வழங்கு வீர்களா என்ற கேள்விக்கு அது முதல்வர் முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.

ஈடி விவகாரம், அதிகாரி சிக்கி உள்ளார் என கெட்ட கேள்விக்கு அது யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செயயும் என தெரிவித்தார். வேலை வாய்ப்பு கிடைக்க 2.000 பேர் பதிவு செய்து உள்ளனர். இதில் மேலும் வர வாய்ப்பு உள்ளன.இதில் தனியார் வேலை வாய்ப்பு பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.