• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பகுதி பள்ளிகளில் சுதந்திர தின விழா..,

ByKalamegam Viswanathan

Aug 16, 2023

சோழவந்தான் பகுதியில் அமைந்துள்ள கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு தலைவர் மணி முத்தையா தலைமை தாங்கினார் நிர்வாகி கவுன்சிலர் வள்ளிமயில் முன்னிலை வகித்தார் சோழவந்தான் நகர அரிமா சங்க பள்ளியின்தாளாளர் கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன் தேசியகொடி ஏற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக முதல்வர் செல்வம் வரவேற்றார் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் தலைமைஆசிரியராக ராபின்சன்செல்வகுமார், சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாத்தி, அனைவருக்கும் கல்வியியக்க பகல் நேர பாதுகாப்பு மைய மாற்றுத்திறனாளிகள் மையத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ஆசிரியை தேவிகா தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வி கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து இனிப்பு வழங்கினார். உழவர் உணவகத்தில் சேது தலைமையிலும் சோழவந்தான் நகரில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் காங்கிரஸ் கொடி ஏற்றி வைத்தனர். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ரிஷபம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் காங்கிரஸ் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதேபோல் சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றிய இனிப்புகள் வழங்கப்பட்டது தலைவர் டாக்டர் மருது பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வாடிப்பட்டி வட்டார அளவிலான தங்க நகை அடகு கடை உரிமையாளர் சங்கம் சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தலைவர் மருது பாண்டியன் செயலாளர் காளீஸ்வரன் பொருளாளர் ராஜா என்ற இருளப்பன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.