• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கோவை செல்வபுரம் பகுதியில் கிரேஸ் டவர்ஸ் எனும் புதிய வளாகம் துவக்கம்…

BySeenu

Oct 25, 2023

கோவை செல்வபுரம் பகுதியில் சுப நிகழ்ச்சிகளுக்கான வில்வம் ஹால், கிராண்ட் லாட்ஜ் மற்றும் ரிலாக்ஸ் அட்மின்ஸ் கிளப் என அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் கிரேஸ் டவர்ஸ் எனும் புதிய வளாகம் துவங்கப்பட்டது.

கோவை செல்வபுரம் பகுதியில் இயங்கி வரும் சினேகராம் பல்நோக்கு மருத்துவமனை குழுமத்தின் புதிய துவக்கமாக கிரேஸ் டவர்ஸ் எனும் புதிய வளாகம் துவங்கப்பட்டது. பேரூர் பிரதான சாலையில் மார்ட்டின் அபார்ட்மென்ட் அருகே துவங்கப்பட்டுள்ள கிரேஸ் டவர்ஸில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கென முழுவதும் குளிரூட்டப்பட்ட வில்வம் ஹால் எனும் அரங்கம் மற்றும் கிராண்ட் லாட்ஜ் எனும் தங்கும் விடுதி அருகில் ரிலாக்ஸ் அட்மின்ஸ் கிளப் எனும் பொழுது போக்கு விடுதி என ஒரே இடத்தில் அமையபெற்றுள்ளது. இந்நலையில் இதற்கான துவக்க விழா சினேகராம் பல்நோக்கு மருத்துவமனையின் தலைவரும், தி.மு.க. வடக்கு மாவட்ட மருத்துவ அணி தலைவருமான டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாக இயக்குனர் தீபா விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பல்துறை நீதி ஆணைய சேர்மன் நீதியரசர் ஏ.கே.ராஜன் வில்வம் ஹாலை திறந்து வைத்தார். கிராண்ட் லாட்ஜை, தி.மு.க.வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஏ.ரவி திறந்து வைத்தார். ரிலாக்ஸ் அட்மின்ஸ் கிளப்பை பிரபல, எண் கணித நிபுணர் அசோக் பாரதி திறந்து வைத்தார். விழாவில் சினேகராம் குழுமத்தின் புதிய உதயங்களாக சினேகராம் குடும்பநல மையம், துணை மருத்துவ பயிற்சி நிலையம், ஆகியவற்றின் துவக்க விழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளர்களாக ஹரி பவன் நிர்வாக இயக்குனர் பாலசந்தர், அருள் மற்றும் தி.மு.க. மாவட்ட பொறுப்பு குழு டி.பி.எஸ்.ரவி, என் நிலம் பில்டர்ஸ் உரிமையாளர், ஃபேரா தேசிய துணை தலைவர் அரிமா செந்தில் குமார், வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.