குமரி மாவட்டத்தில் அன்று தொட்டு இன்றுவரை பெரும் வர்த்தக பகுதி. நாகர்கோவிலை அடுத்திருக்கும் கோட்டாறு.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் புனித சவேரியார் மன்னரிடம் தேவாலையம் அலையம் அமைக்க இடம் கேட்டபோது, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியான கோட்டாறு பகுதியில், புனித சவேரியாருக்கு மன்னர் கொடுத்த இடத்தில் புனித சவேரியாரே அவர் கையால் கட்டிய சிற்றாலையும் இன்றும் அனைத்து மத மக்களின் வழிபாடு தலமாக உள்ளது. கால ஓட்டத்தில் சிற்றாலயத்தை உள்ளடக்கிய பெரிய ஆலையம் கட்டப்பட்டது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கொல்லம் பகுதியில் இருந்து, குமரி களியக்காவிளை பகுதி வரை அன்று கத்தோலிக்க திருச்சபையின் கொல்லம் மறைமாவட்டம் என அடையாளம் பெயர் பெற்றிருந்தது.
சுதந்திர இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் பிரித்த காலத்திற்கு பின் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் 1956_ம் ஆண்டு நவம்பர் 1_ம் நாளுக்கு பின் குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புதிய மறைமாவட்டமானது கோட்டாறு மறை மாவட்டம்,தனி ஆயரை அன்றைய போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டது.

.கோட்டார் மறை மாவட்டத்தின் முதல் ஆயர் ஆஞ்சிசாமி, அந்த வரிசையில் இப்போதைய ஆயர் முனைவர் நசரேயன் சூசை. காலம், காலமாக கேட்டார் சவேரியார் கோவிலின் திருவிழா அனைத்து மத மக்களின் பொது சொந்த விழா என்ற உணர்வை குமரி மக்களின் மனதில் ஏற்பட்டு விட்ட உணர்வு.
பக்தர்களின் வேண்டுதலை,கோரிக்கையை. புனிதர் சவேரியாரிடம் கேட்டு விட்டால் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் பரவியதால். கேட்ட “வரம்” தரும் கோட்டாறு சவேரியார் என்ற சொல் குமரி கடந்து அனைத்து கேரள மாநிலங்களிலும், குமரியின் அண்டை மாவட்டங்களான. நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அல்லாத பிற இனத்தவர்களும். கோட்டாறு சவேரியார் கோயில் திருவிழாவில் பங்கேற்பது, பன்னெடும் காலமாக தொடர்ந்தது இன்று வரை தொடர்கிறது.

கோட்டாறு சவேரியார் கோயில் திருவிழாவில் மிக முக்கியமான நிகழ்வுகள். திருவிழாவின் 9_ம் நாள் இரவு நடைபெரும் மூன்று தேவர்களின் பவனியில் தேரோடும் வீதியில் மதம் கடந்த மக்களின் “கும்பிடும்” நமஸ்காரம் என்பது பழமையான புகழ்பெற்ற வழிபாடு.
கோட்டாறு சவேரியார் கோயில் திருவிழாவின் முக்கிய தேரோட்டம் நாளில் முதல் முதலாக,குமரி மாவட்டத்திற்கு விடுமுறையை அறிவித்தது. தமிழகத்தில் முதல் முறையாக முதல்வர் பதவி வகித்த காலத்தில் கலைஞர் கருணாநிதியால், குமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

திருவிழாவின் காலத்தில் 10_ நாட்களில் மாலை நடக்கும் கலை நிகழ்ச்சிகளில்.அரசின் வருவாய் துறை, காவல்துறை, நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் அந்த செலவை ஏற்றுக்கொள்வது என்பது ஒரு தனி சிறப்பு.
கோட்டாறு சவேரியார் கோயிலின் இவ்வாண்டின் 10_ம் திருவிழாவான இன்று (டிசம்பர்_3)குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் சிறப்பு விடுமுறை
விடப்பட்டுள்ளது.
தமிழக அரசு தமிழ் நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கான தொன்மையான வழிபாட்டுத்தலங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் கோட்டாறு புனித சவேரியார் தேவாலயம் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.2 கோடியே 28 லட்சத்து 83 ஆயிரத்து 816 நிதி ஒதுக்கீடு செய்து,அதில் முதல் கட்டமாக (50 சதவீதம்) தொகையான ரூ.1 கோடியே 14 லட்சத்து 41ஆயிரத்து 908 வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள தொகையான ரூ.1 கோடியே 14 லட்சத்து 41 ஆயிரத்து 908ம் விரைவில் வழங்கப்படும்.

நாகர்கோவில் முதல் மாநகராட்சியின் முதல் மேயரான எனக்கு இந்த அற்புதமான வாய்ப்பினை தந்த தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலினுக்கு இதயப்பூர்வமான நன்றியை குமரி மாவட்ட மக்களின் சார்பில் தெரிவிப்பதுடன். இந்த பணியை நான் செய்ய அருளாசி செய்த கேட்டவரம் தரும் கோட்டார் புனித சவேரியாரை வணங்கி மகிழ்கிறேன் என தெரிவித்தார் நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயர் மகேஷ்.