• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

கனமழை எதிரொலி…பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Byகாயத்ரி

Nov 24, 2021

திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழை எச்சரிக்கை காரணமாக வேறு சில மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.