கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை குமாரக்கோவில் விலக்கில் இரண்டு சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தமிழ்நாடு பதிவு எண் கொண்ட டூரிஸ்ட் வேன் மற்றும் கேரளா பதிவெண் கொண்ட டெம்போ டிராவல்ஸ் – செண்டை மேளத்திற்கு சென்று திரும்பிய வழியில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது.
போலீசார் உடன் பொதுமக்கள் உதவியுடன் வாகனங்களை சாலை ஓரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு, டெம்போ வாகனத்தை விபத்து பகுதியில் இருந்து
மாற்றியதால். தடைப்பட்டிருந்த வாகன போக்குவரத்து சரியானது.
விபத்தில் காயம் அடைந்தவர்களை முதல் கட்ட சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்த்தனர்.