தமிழக ஆளுநர் அளித்த சுதந்திர தின தேனீர் விருந்தை புறக்கணித்தது திமுக. அதன் கூட்டணி கட்சிகள். ஆளுநரின் தொடர் பேச்சுகளுக்கான எதிர்ப்பின் அடையாளம்.
முதல்வர் உட்பட அமைச்சர்கள் பங்கேற்பு ஆட்சியின் நிலைப்பாடு என தக்கலையில், தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற கனிமொழி அவரது கருத்தை வெளிப்படுத்தினார்.
தி மு க, அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்காதது கட்சியின் நிலைப்பாடு இதன் மூலம் தமிழக ஆளுநரின் செயல் பாடுகள் பேச்சிற்கான கண்டனத்தின் அடையாளம் என தெரிவித்தவர். அதனை தொடர்ந்து வெளிப்படுத்திய கருத்து முதல்வர் உட்பட அமைச்சர்கள் பங்கேற்பு ஆட்சியின் நிலைப்பாடு, இதன் மூலம் தமிழக மக்களின் மத்தியில் திமுக அதன் கூட்டணி கட்சிகளின் அணுகுமுறையின் ஒற்றுமை என்பதையும் வெளிப்படுத்தும் அடையாளங்கள் எனவும் தெரிவித்தார்.
கலைஞர் கருணாநிதியின் நாணயம் வெளியீட்டு விழாவில், அண்ணாமலை கலந்து கொள்வதில் அரசியல் ஒன்றும் இல்லை.
தனியார் மகளிர் கான்வென்ட் விழாவில் பங்கேற்கும் முன் தக்கலையில், அனைத்திந்திய இளைஞர் சங்கம் சார்பில் வயநாடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலில் பணம் செலுத்தினார். தொடர்ந்து வயநாடு நிவாரண நிதிக்கு பணம் திரட்டும் சாலை ஓர தேநீர் கடையில் கனிமொழி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பணம் செலுத்தி தேநீர் அருந்தினர். மழை கடுமையாக இருந்தபோதும் வயநாடு மக்களின் துயர் துடைக்கும் நிதி வழங்க அனைத்திந்திய இளைஞர் சங்கம் நடத்தும் தேநீர் கடையில் கனிமொழி தேநீர் அருந்தியது அங்கு கூடியிருந்த பொது மக்களை வெகுவாக ஈர்த்தது.





