அரியலூர் , மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 94 ஆவது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் பனங்கூர் பி எஸ் ஜெயராமன் தலைமை வகித்து, அரியலூர் செட்டியேரிக்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி, கர்மவீரர் காமராஜர் ஆகியோர் திருவுருவ சிலைகளுக்கும், மக்கள் தலைவர் ஜிகே மூப்பனார் திருவுருவப்படத்திற்கும் கட்சி நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து, மரியாதை செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கு டெல்டா மண்டல தமிழ் மாநில காங்கிரஸ் வர்த்தக அணி தலைவர் பனங்கூர் சி காமராஜ் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் தமிழ் மாநில காங்கிரஸ் அரியலூர் மாவட்ட பொருளாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார்.தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள், வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் ஆர் எம் குமார்,மாவட்டத் துணைத் தலைவர் ஏ எம் பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதி கரிகாலன்,தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் செல்லக்கண்ணு, சாத்தமங்கலம் ராமையா ,அரியலூர் தெற்கு வட்டார தலைவர் பனங்கூர் சுப்பிரமணியன்,டெல்டா மண்டலத்தின் மாணவரணி தலைவர் கை .மனோஜ் குமார்,தமிழ் மாநில காங்கிரஸ் மகளிர் அணி நிர்வாகிகள் மணக்கால் செந்தாமரை, மணிமேகலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.