புதுச்சேரி பிரதான சாலையான 100 அடி சாலை இந்திரா காந்தி சதுக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனத்திலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டடு, சுமார் 200 மீட்டருக்கு மேலாக எண்ணெய் சாலையில் கொட்டிக்கிடந்தது.

இதன் காரணமாக இருசக்கர வாகன ஒட்டிகள் சிலர் அவ்விடத்தை கடக்கும் போது வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட அப்பகுதியில் இருந்த போக்குவரத்து காவலர் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக எண்ணெய் கொட்டிருந்த சாலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து எண்ணெய் கசிவுகளை சாலையில் இருந்து அகற்றினர்.
விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையில் எண்ணெய் கொட்டியதால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் எந்த வாகனத்தில் இருந்து எண்ணெய் கசிந்தது என்பது தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.