• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

வியாபாரிகள் சங்கம் சார்பாக இலவச மருத்துவ முகாமை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா துவக்கம்

Byஜெ.துரை

Dec 30, 2023

தென் சென்னை மேற்கு மாவட்டம் மற்றும் சைதாபேட்டை ரோடு வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தூய்மை பணியாளார் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சிம்ஸ் மருத்துவமனை குழு மூலம் இலவச முழு உடல் பரிசோதனை முகாம் கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் சென்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த முகாமை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.ஆர் பன்னீர்செல்வம், செயலாளார் N.P பாலன் மற்றும் வடபழனி சைதாப்பேட்டை ரோடு வட்டார வியாபாரிகள் சங்க சங்க தலைவர் சுடலைமுத்து, பொருளாளர் லயன் தா.ரங்கன் உள்ளிட்ட ஏராளமான வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முகாமில் தூய்மை பணியாளர்கள் இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வியாபாரிகள் சங்க தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.ஆர். பன்னீர்செல்வம்..,

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் விதமாக வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக இலவச மருத்துவ முகாம் சிம்ஸ் மருத்துவமனை மற்றும் ராஜன் கண் மருத்துவமனையுடன் இணைந்து இன்று ஒரு நாள் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இங்கு பொதுமக்களுக்கு ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.