திமுக அரசு 313 வது வாக்குறுதியான அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர் ஆக்குவோம் என்று வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று தற்போது வரை நடைமுறைப்படுத்தாததை கண்டித்தும்,அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியராக்கி குறைந்தபட்ச ஊதிய மாதம் ரூ 26,000 வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான ஓய்வூதியம் ரூபாய் 9,000 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும்,அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூபாய் 10 லட்சம், உதவியாளருக்கு ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்- இதில் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கேட்டு கோஷங்களை எழுப்பினர்.
