மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் தென்கரை முள்ளிப்பள்ளம் ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

கோலப்போட்டி இசை நாற்காலி, லெமன் ஸ்பூன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலக்கால் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரம்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் விக்னேஷ் தலைமை வகித்தார். தென்கரை ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் முனியராஜ் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரம்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.பற்றாளர் திருப்பதி வரவேற்றார்.
முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூர்ணிமா முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா பரிசுகள் வழங்கினர் பற்றாளர் அமுதா வரவேற்றார். இதில் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்று பொங்கல் வைத்து சிறப்பு செய்தனர்.




