• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உயர் நீதிமன்றத்தில் ஆஜரான ஆக்கிரமிப்பு அகற்றல் – விவகாரம்..,

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சடையமங்கலம் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் நீர்வளத்துறைக்கு சொந்தமான ‘மண்குளத்திற்குள்’ ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அரசு கட்டிடங்களை அகற்றக்கோரி பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் முருகேசபிள்ளை ஆகியோர் தாக்கல் செய்திருந்த வழக்கில்.

“மாவட்டத்திற்குள் இனிமேல் எந்த அரசு கட்டிடங்களும் குளங்கள் உட்பட நீர்நிலைகளுக்குள் ஆக்கிரமித்து கட்ட கூடாது,மீறி கட்டினால் இடித்து அகற்றப்படும்” என்று 2024 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது.

  இந்நிலையில்,  இந்த உத்தரவை மீறி மயிலாடி நீர்வளத்துறை பாசன பிரிவு அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மருங்கூர் பூலாங்குளத்திற்குள்' ஆக்கிரமித்து. மருங்கூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியானது தொடங்கப்பட்டது. இதனை நிறுத்துமாறும் நீர்நிலைக்குள் ஆக்கிரமித்து கட்டக்கூடாது என்றும் பாசனத்துறை நிர்வாகிகளும் , நீர்வளத்துறை பொறியாளர்களும் அதிகாரிகளும் -  பலமுறை தடுத்தனர். ஆனால், அதை மீறி பூங்காவிற்கான கட்டுமானங்கள் கட்டப்பட்டு வந்தது. ஆகவே, இதனை இடித்து அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கவனத்திற்கு மீண்டும் பாசனத்துறை நிர்வாகிகள் கொண்டு சென்ற - போது மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து - கடந்த சில மாதங்களுக்கு முன்பு.மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா அவர்கள் நேரடியாக மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிவிளக்கம் அளித்தார்.

 இது சம்பந்தமான செய்திகளை பத்திரிகைகளில் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியது. உடனடியாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவுட்டதைத் தொடர்ந்து....

“கட்டுமானங்கள் இடிக்கப்படும்” என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது தொடங்கப்படாததால்…பாசனத்துறை நிர்வாகிகள் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து – பூலாங்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள், மருங்கூர் பேரூராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் இணைந்து – ‌முதல் கட்டமாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த பூங்காவினுடைய கட்டுமானங்களை இடித்து அகற்ற ஆரம்பித்துள்ளனர்.

எஞ்சிய ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என்றும், ஆக்கிரமிப்பு அகற்றியதால் ஏற்பட்ட கட்டுமான கழிவுகள் உடனடியாக அங்கிருந்து அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் … வழக்கு தாக்கல் செய்த பாசனத்துறை நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர்.