• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை வேடிக்கையாக உள்ளது

ByA.Tamilselvan

Jul 23, 2022

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை உண்மைக்குபுறம்பாக வேடிக்கையாக உள்ளது என் அமைச்சர் சக்கரபாணி ட்விட்டரில்பதிவிட்டுள்ளார்.
உணவுத் துறை அமைச்சர் அர.சக் கரபாணி ட்விட்டரில் . ஏதோ ஒரு நாளிதழில் வந்த உண்மைக்கு புறம் பான செய்தியை நம்பி அதைப்பற்றி சிறிதும் ஆரா யாமல் எதிர்க்கட்சி தலை வர் அறிக்கை வெளியிட்டுள் ளார். இந்திய உணவுக் கழகத்திடமிருந்து வந்த கடி தத்தில் கும்பகோணத்தில் 92.5 மெட்ரிக் டன் அரிசி 0.2 சதவீதம் கூடுதலாக சேதம் அடைந்துள்ளதால் மக்க ளுக்கு அனுப்பக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த அரிசி கடைகளுக்கு அனுப்பப்படவில்லை.மேலும் இந்த அரிசியை அனுப்பிய ஆலைகளுக்கு நோட்டிஸ் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உண்மை நிலை என்னவென்று அறியாமல் பேனை பெரிதாக்கி பெரு மாள் ஆக்கியது போல் 92,500 கிலோ என்பதனை 9 லட்சம் டன் அரிசி என்று எதிர்கட்சி தலைவர் அறிக் கை வெளியிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் கவனத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அரிசி ஆலை முகவர்கள் மற்றும் கழக ஆலைகள் மூலம் அரைத்த அரிசியின் தற்போதைய இருப்பே சுமார் 3 லட்சத்து 23 ஆயிரம் டன் தான். ஏதோ குறை கூற வேண்டும் நோக்கில் தவறான குற்றச் சாட்டுக்களை முன் வைப்பது அவர் வகித்த பதவிக்கும், வகிக்கும் பதவிக்கும் அழ கல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அர. சக்கரபாணி பதிவிட்டுள் ளார்.