• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ் டிராமா ‘ஹட்டி’ திரைப்படம்…

Byஜெ.துரை

Sep 7, 2023

இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ் டிராமா ‘ஹட்டி’ திரைப்படம் ZEE5 தளத்தில் வெளியாகிறது !!

Zee Studios, சஞ்சய் சாஹா மற்றும் Anandita Studios ராதிகா நந்தா தயாரிப்பில், அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ள இந்த நேரடி-டிஜிட்டல் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ZEE5 தளத்தில் திரையிடப்படவுள்ளது.

இந்தியா7 செப்டம்பர் 2023 இந்தியாவின் மிகப்பெரிய பன்மொழி கதைசொல்லி, மற்றும் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, அதன் மிகவும் எதிர்பார்க்கப்படும்.

நேரடி-டிஜிட்டல் திரைப்படமான ‘ஹட்டி’ படத்தின் டிரெய்லரை வெளியிட்ட த்ஹிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது. அதிலும் நவாசுதீன் சித்திக் முதன்முறையாகத் திருநங்கையாக நடித்திருப்பது ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. நவாசுதீன் சித்திக் மற்றும் அனுராக் காஷ்யப் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் இலா அருண், முகமது ஜீஷன் அய்யூப், சவுரப் சச்தேவா, ஸ்ரீதர் துபே, ராஜேஷ் குமார், விபின் சர்மா மற்றும் சஹர்ஷ் சுக்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த பரபரப்பான பழிவாங்கல் டிராமா திரைப்படத்தை, அறிமுக இயக்குநர் அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ளார்.

Zee Studios, சஞ்சய் சாஹா மற்றும் Anandita Studios ராதிகா நந்தா தயாரிப்பில், பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள பரபரப்பான ரிவென்ஜ் டிராமா “ஹட்டி” திரைப்படம் செப்டம்பர் 7, 2023 அன்று ZEE5 இல் திரையிடப்படவுள்ளது.

என்சிஆர், குர்கான் மற்றும் நொய்டாவில் தற்கால பின்னணியில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ளது இப்படம். குற்றப்பின்னணி கொண்ட திருநங்கை கும்பலில் சேர அலகாபாத்திலிருந்து டெல்லிக்கு வரும் நவாசுதீன் சித்திக், அந்த கும்பலில் சேர்ந்து, வளர்கிறான், தன் குடும்பத்தை அழித்த அந்த கும்பலின் தலைவனாக இருந்து, அரசியல்வாதியாக மாறிய அனுராக் காஷ்யப்பை தேடி பழிவாங்குவதே அவன் நோக்கம். புதுமையான களத்தில் அழுத்தமான பழிவாங்கும் கதையாக உருவாகியுள்ளது.

இந்த ஹட்டி திரைப்படம். அக்ஷத் அஜய் ஷர்மா மற்றும் ஆதம்யா பல்லா இணைந்து எழுதியுள்ள, ‘ஹட்டி’ தலைநகரம் முழுவதும் செயல்படும் அழுத்தமான குற்றப்பின்னணியை, குற்றவாளிகளின் உலகை அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 7, 2023 அன்று ZEE5 இல் “ஹட்டி” திரையிடப்படுகிறது.