திருப்பரங்குன்றம் அருகே புதுக்குளம் பிட் ( முத்துப்பட்டியை) சேர்ந்தவர் விக்னேஷ் இவர் பரவை மார்க்கெட்டில் காய்கறி வியாபரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரம்யா அரசுபள்ளி ஆசிரியை இவர்களுக்கு ஆதேஷ் விக்ரம் (வயது 8), சாய் ஸ்ரீ (வயது 6) என்று இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர்களுக்கு காதணி விழா என்று முத்துப்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
காதணி விழாற்காக திண்டுக்கல் ஆர்.எம். காலனியை சேர்ந்த தவபாண்டி மகன்கள் ரஞ்சித்குமார் மற்றும் ராஜபாண்டி. இருவரும் தாய்மாமன் சீர்வரிசையாக நான்கு டிராக்டர்களின் மா பலா வாழை உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள்,
முந்திரிப் பருப்பு பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு உள்ளிட்ட சத்தான பருப்புகள்
அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை சாமான்கள் என நான்கு டிராக்டர்களின் சீர்வரிசையாக குவித்துள்ளனர்.

2 ஆட்டு கிடா முதல் ஆனியன் (வெங்காயம்) வரை வத்தல் முதல் வசம்பு வரையிலும்
சீர்வரிசையில் மொய் பணமாக மேலும் 50 பவுன் நகை, இருபத்திஇரண்டு லட்சம் சீர் பணம் மற்றும் மாலையாக 10 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் 200 ரூபாய் நோட்டுகளில் இரண்டு மாலை தயார் செய்யப்பட்டு அசத்தியுள்ளனர்.
மேலும் காதணி விழா நடைபெறும் குழந்தைகள் அதேஸ் விக்ரம் சாய்ஸ்ரீ இருவரையும் இருகுதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமரவைத்து வீதிகளில் சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக வந்தனர்.
