• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருச்சியில் புதிய நூலகத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

Byரீகன்

Jul 14, 2025

திருச்சி வரகனேரியில் ரூ.26.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரான்சிஸ் படிப்பக கட்டிடத்தை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர்கள் மதிவாணன், ஜெயநிர்மலா, துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாநில, மாவட்ட திமுக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டனர்.